To Produce valuable patriotic citizens of future India

Online Semester Eaxminations instructions - 2020

September 15, 2020

சுற்றறிக்கை

மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்.

  1. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டவாறு தேர்வுகள் செப்டம்பர் 21.9. 2020 அன்று தொடங்கி 30 9 .2020 அன்று முடிவுறும். தேர்வு முன்னர் அறிவித்த அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை
  2. மாணவ, மாணவியர்கள் வாட்ஸ்அப்பில் தங்கள் பெயரை பின்வருமாறு மாற்ற வேண்டும். (எ.கா: மாணவர்களின் பெயர் - பதிவு எண் – பாடபிரிவு)
  3. செமஸ்டர் தேர்வின் கேள்வி முறை முன்பு இருந்ததைப் போலவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
  4. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து (COE) தேர்வு கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் உங்கள் வகுப்பு வாட்ஸ் ஆப் இளங்கலை பாடப்பிரிவு (2017-2020) மற்றும் முதுகலை பாடப்பிரிவு (2018-2020) குழுவில் சேர்க்கப்படுவார். அவர் வாட்ஸ்அப் குரூப்பில் செமஸ்டர் தேர்வின் வினாத்தாளை அனுப்பி வைப்பார்.
  5. காலை 9.45 மணி முதல் 9.50 மணிக்குள் வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாளை அனுப்புவார்.காலை 10.00 மணிக்கு, நீங்கள் உங்கள் செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும், மதியம் 1.00 மணிக்குள் முடிக்க வேண்டும். விடைத்தாளின் முதல் பக்கத்தில் பின்வரும் தகவல்கள் கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும்.
    1. மாணவர்களின் பதிவு எண்:
    2. பாடப்பிரிவு:
    3. சப்ஜெக்ட் நேம்:
    4. சப்ஜெக்ட் கோடு :
    5. தேதி :
    இவைகள் அனைத்தும் அவசியம் இடம் பெற வேண்டும்.எக்காரணம்L கொண்டும் மாணவரின் பெயர் விடைத்தாளில் இடம்பெறக்கூடாது கவனமாக இருக்கவும்.
  6. மாணவர்கள் பிளே ஸ்டோரிலிருந்து (Docl scanner ) app # டாக் ஸ்கேனர் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் விடைத்தாள்களை (PDF) பி.டி.எஃப் ஆக மாற்றி அதை எந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதோ அதே எண்ணிற்கு விடைத்தாளைபும் தேர்வு கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் .
  7. எழுதி முடிக்கப்பட்ட விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் காலை 10.30 மணிக்கு மேல் பிற்பகல் 1.30 மணிக்குள் உங்களுடைய தேர்வு கண்காணிப்பாளர் Invigilator - க்கு அனுப்பி வைக்கவேண்டும் 1.30 மணிக்கு மேல் அனுப்பக்கூடிய விடைத்தாள்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே விடைத்தாளை அனுப்புவதில் கவனமாக இருங்கள்.
  8. மாணவர்கள் தங்கள் தேர்வை எழுத A4 தாளை மட்டுமே பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.வினாவிற்கான பதிலை A4 தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும் இருபக்கமும் எழுதக்கூடாது .
  9. விடைத்தாள்களை தேர்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்ப A4 sheet கவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.தேர்வு தாள்களுக்கு கண்டிப்பாக பக்கம் எண் கொடுக்க வேண்டும். தேர்வு எழுதி முடித்து அதனை ஸ்கேன் செய்து அனுப்பிய பின்னர் தேர்வு எழுதிய தாள்களை பக்கம் வாரியாக அடுக்கி கட்டி அதனை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
    • அனுப்ப வேண்டிய முகவரி

      தேர்வாணையர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி ), ஈரோடு - 638 009

      என்ற முகவரிக்கு கொரியர்/ பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக அன்றைய தினமே அனுப்பவேண்டும்

    • கவரில் முன்பகுதியில்

      பெயர் :, பதிவு எண்: , பாடப்பிரிவு :, சப்ஜெக்ட் நேம் :, சப்ஜெக்ட் கோடு :, தேதி :

    இவைகளை அவசியம் எழுதி இருக்க வேண்டும். விடைத்தாளை எக்காரணம் கொண்டும் மடித்து அனுப்பக்கூடாது.
  10. தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை உடனடியாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  11. தேர்வு எழுத ஹால் டிக்கெட் தேவையில்லை. எனவே மாணவர்கள் ஹால் டிக்கெட் சம்பந்தமாகக் கல்லூரிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கலாகிறது. ஆனால் கட்டணங்கள் நிலுவையில் இருந்தால் உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  12. 12.18.9.2020 அன்று, அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கு காலை 11.00 மணிக்கு மாதிரி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
  13. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இறுதியாண்டு செய்முறை தேர்வுகள் பாரதியார் பல்கலைக்கழக அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்படுகிறது. எனவே மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவிக்கப்படுகிறது
    • குறிப்பு :

      இளங்கலை பாடப்பிரிவில் ஆறாவது பருவத் தேர்வில் (6th semester ) மற்றும் முதுகலை பாடப்பிரிவில் நான்கவது பருவத் தேர்வில் (4thSemester) தேர்வில் தவறிய (Arrear) மாணவர்கள் தேர்வுக்கான கட்டணத்தை முறைப்படி செலுத்தி இருந்தால் அவர்கள் தங்கள் வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட விவரங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் கைபேசி எண் 9361322696 யைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் .

      - முதல்வர்

To Produce valuable patriotic citizens of future India