(எ.கா: மாணவர்களின் பெயர் - பதிவு எண் – பாடபிரிவு)
செமஸ்டர் தேர்வின் கேள்வி முறை மாதிரித்தேர்வில் இருந்ததைப் போலவே இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து (COE) தேர்வு கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் உங்கள் வகுப்பு வாட்ஸ் ஆப் இளங்கலை பாடப்பிரிவு (2020-2021) குழுவில் சேர்க்கப்படுவார். அவர் வாட்ஸ்அப் குரூப்பில் செமஸ்டர் தேர்வின் வினாத்தாளை அனுப்பி வைப்பார்.காலை 9.45 மணி முதல் 9.50 மணிக்குள் வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாளை அனுப்புவார். மாணவர்கள் உடனடியாக தங்களது வருகைப்பதிவை காலை 10.00 மணிக்குள் தங்களது தேர்வுக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய பின் நீங்கள் உங்கள் செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும், மதியம் 1.00 மணிக்குள் முடிக்க வேண்டும்.
விடைத்தாளின் முதல் பக்கத்தில் பின்வரும் தகவல்கள் கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும்
- மாணவர்களின் பதிவு எண்:
- பாடப்பிரிவு:
- சப்ஜெக்ட் நேம்:
- சப்ஜெக்ட் கோடு :
- தேதி :
இவைகள் அனைத்தும் அவசியம் இடம் பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவரின் பெயர் விடைத்தாளில் இடம்பெறக்கூடாது கவனமாக இருக்கவும்.
மாணவர்கள் பிளே ஸ்டோரிலிருந்து (Docl scanner ) app # டாக் ஸ்கேனர் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் விடைத்தாள்களை (PDF) பி.டி.எஃப் ஆக மாற்றி அதை எந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதோ அதே எண்ணிற்கு விடைத்தாளைபும் தேர்வு கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைக்க வேண்டும் .எழுதி முடிக்கப்பட்ட விடைத்தாள்களை வாட்ஸ்ஆப் மூலம் காலை 10.30 மணிக்கு மேல் பிற்பகல் 1.30 மணிக்குள் உங்களுடைய தேர்வு கண்காணிப்பாளர் Invigilator - க்கு அனுப்பி வைக்கவேண்டும் 1.30 மணிக்கு மேல் அனுப்பக்கூடிய விடைத்தாள்களை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே விடைத்தாளை அனுப்புவதில் கவனமாக இருங்கள்.மாணவர்கள் தங்கள் தேர்வை எழுத A4 தாளை மட்டுமே பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.வினாவிற்கான பதிலை A4 தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும் இருபக்கமும் எழுதக்கூடாது.விடைத்தாள்களை தேர்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்ப A4 sheet கவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு தாள்களுக்கு கண்டிப்பாக பக்கம் எண் கொடுக்க வேண்டும். தேர்வு எழுதி முடித்து அதனை ஸ்கேன் செய்துPDF ஆக அனுப்பிய பின்னர் தேர்வு எழுதிய தாள்களை பக்கம் வாரியாக அடுக்கி கட்டி அதனை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தேர்வு நாளன்றே உடனடியாக கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.இவைகளை அவசியம் எழுதி இருக்க வேண்டும். விடைத்தாளை எக்காரணம் கொண்டும் மடித்து அனுப்பக்கூடாது.
தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை உடனடியாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் . தாமதமாக வரும் விடைத்தாள்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது.- முதல்வர்/தேர்வாணையர்
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
Click Here to download Online Examinations Awareness
To Produce valuable patriotic citizens of future India
▲